பாட்டியல்
- நூற்பா எண் 68, 69, 70 |
197 |
‘மேற்குலத் திற்பிறந்த மின்னாளை வெண்பா
ஒன்பதா லும்வகுப்பு ஒன்பதி னாலும்
வழுத்துவது மங்கல வள்ளை ஆகும்.’
- மு. வீ. யா. ஒ. 150
தொ. வி. 283 உரை.
68
வேறுவகை இரட்டை மணிமாலை
829.
வெண்பா விருத்தம் வியப்புற இருபஃது
எண்பட உரைப்பது இரட்டைமணி மாலை.
இது
வேறொரு வகையான் இரட்டைமணி மாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: வெண்பாப் பத்தும் விருத்தம் பத்தும்
அந்தாதித்
தொடையான் பாடுதலும் இரட்டைமணி மாலையாம்
என்றவாறு.
‘உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. மாலை என்பதனான்
அந்தாதி
என்பது பெற்றாம்.
(69)
ஒத்த நூற்பா
‘பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருபான்
மற்றை இரட்டை மணிமாலையாம்.’
- வெண். பாட். செ. 36
69
நேரிசை
830.
இன்னிசை போல இறைவன் பெயர்ஊர்
தன்னின் இயல்வது தான்நே ரிசையே.
இது
நேரிசை ஆமாறு மாட்டேற்றானே அறிவிக்கின்றது.
|