198
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
இ - ள்: இன்னிசை வெண்பாவே போலப் பாட்டுடைத்
தலைவன் பெயர் ஊரைச் சார்ந்து வரத் தொண்ணூறும்
எழுபதும் ஐம்பதும் பாடின் அவற்றைப் பெயர் நேரிசை
என்றும் ஊர் நேரிசை என்றும் வழங்கப்படும் என்றவாறு.
(70)
ஒத்த நூற்பாக்கள்
‘முதல்வன்ஊ ரின்பேரான் மொழிவன வெண்பா
‘அதனைத்தொண் ணூறுஎழுபான் ஐம்பான்.’
- வெண். பாட். செ. 14
‘ஊர்பெயர்சார நேரிசைவெண்பாத் தொண்ணூறு
ஏழ்ஐம்பானும்’
- நவ. 10
‘பாட்டுடைத் தலைவனொடு பெயர்சார நேரிசைவெண்
பாவினால் தொண்ணூறும்
பத்தேழேனும் ஐம்பதேனும் சிறப்புடன்
பாடுவது பெயர் நேரிசை,
மீட்டும்அத் தலைவன் ஊர்சாரமுன் தொகைதொடை
விளம்பல் ஊர் நேரிசையதாம்.’
-
பி. தீ. 22
‘பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார
நேரிசை வெண்பாத் தொண்ணூ றேனும்
எழுப தேனும் ஐம்ப தேனும்
அறைவது பெயர்நே ரிசையா கும்மே.’
- மு. வீ. யா. ஒ. 133
‘ஊரைச் சார உரைப்பதுஊர் நேரிசை.’
’’ 134
‘வெண்பா வால்சிறப் பித்தூர் ஒருபான்
பாவிரித்து உரைப்பதுஊர் வெண்பா ஆகும்.’
’’ 135
70
|