பாட்டியல்
- நூற்பா எண் 71 |
199 |
மெய்க்கீர்த்தி
831.
சொற்சீர் அடியால் தொழிற்படு புகழை
வேந்தர்பால் கூறின் மெய்கீர்த்தி ஆகும்.
இது
மெய்க்கீர்த்தி ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: சொற்சீரடியாலே காரியப் புகழை மன்னரிடத்துக்
கூறுதல் மெய்க்கீர்த்திஎன்னும்பெயரினைப்பெறும்என்றவாறு.
71
ஒத்த நூற்பாக்கள்
‘சீர்நான் காகி இரண்டடி தொடையாய்
வேந்தன் மெய்ப்புகழ் எல்லாம் சொல்லியும்
அந்தத்து அவன்வர லாறு சொல்லியும்
அவளுடன் வாழ்கெனச் சொல்லியும் மற்றவன்
இயற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத்
திறப்பட உரைப்பது சீர்மெய்க் கீர்த்தி.’
- பன். பாட்
313
‘நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தியின் அந்தம்
முறையாய் முடியும் எனஉரைத் தனரே.’
’’ 314
தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீர்
அடியால்
எழில்அரசர் செய்தி இசைப்பர்.’
-
வெண். பாட். செ. 34
‘சிறந்த மெய்க்கீர்த்தி அரசர்செயல்
சொற்றவாம்
அச்செய்யுள், அறைந்திடு சொற்சீரடியாம்.’
- நவ. 51
‘வேந்தர்க்கு உண்மை திகழ்சீர்த்தி உரைப்பது
மெய்க்கீர்த்தி.’
-
சிதம். பாட். 36
‘சொற்சீர் அடியெனும் கட்டுரைத் தொடர்பால்
குலமுறை ஆற்றிய கீர்த்தியைக் கூறல்
மெய்க்கீர்த்தி மாலையாம் விளம்புங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 99;
தொ. வி. 283 உரை.
|