200                      இலக
200

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

                        காப்புமாலை

 

832.    காப்புமூன்று ஐந்துஏழ் காப்பு மாலையாம்.

 

இது காப்புமாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும் ஏழு கவியானும் பாடுவது காப்புமாலையாம் என்றவாறு.     

      (72)

 

                           ஒத்த நூற்பா

 

     ‘மூன்றுஐந்து ஏழ்பாத் தெய்வம் காக்கக் காப்புமாலை.’  

- நவ. 6

     ‘அரிய தெய்வம் காத்தலாக மூன்றுஐந்து ஏழின்

     அறை செய்யுள் காப்பு மாலை.’               

- பி. தீ. 13

     ‘கடவுள் காத்த லாக ஒருமூன்று

      ஐந்துஏ ழானும் அறைவது காப்பு

      மாலை எனப்பெயர் வைக்கப் படுமே.’     

- மு. வீ. யா. ஒ. 100;

                                          தொ. வி. 283 உரை.

                                                           வேனில் மாலை

 

833.    வேனிலைப் பாடுதல் வேனில் மாலை

 

இது வேனில்மாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: இளவேனிலையும் முதிர்வேனிலையும் சிறப்பித்துப் பாடுதல்
வேனில் மாலையாம் என்றவாறு.                            

(73)

                    ஒத்த நூற்பாக்கள்

 

     ‘வேனிற் புகலல் ஆன்ற வேனில் மாலை.’             

- நவ. 6