202 இலக

202

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

‘அகவல் விருத்தம் வகுப்பினால் ஒன்றில்

பத்து முதலா நூறு வரைபல்

சந்தம் மேவர அந்தா தித்துச்

சாற்றுவது பல்சந்த மாலை என்ப.’

- 

 பி. ம. 24

‘மகிழ்வுறும் செய்யுள் பப்பத் தாக ஒவ்வொரு

வகைக்கும் ஓர் சந்தமாகி

வரநூறு செய்யுளாய்ச் சொல்வதே பல்சந்த

மாலையாய்ச் சொல் வார்களே.’

- 

 பி. தீ. 11

‘பப்பத் தாகப் பலசந் தத்தொடு

ஈரைம் பான்பாட் டியல்வது அதுபல்

சந்த மாலையாம் சாற்றுங் காலே.’

 -

 மு. வீ. யா. ஒ. 93

74

அங்க மாலை

 

835. மிக்க உறுப்பவை வெண்பா விருத்தம்

    தொக்கவொடு முறையான் தொடர்வுறப் பாடுதல்

    அங்க மாலை ஆமெனப் பகர்வர்.

இஃது அங்கமாலை ஆமாறு கூறுகின்றது.

            இ - ள்: ஆண் மகனுக்கும் பெண் மகளுக்கும் எடுத்துக்கூறும்
மிக்க அவயவங்களைத் தொக்க அவயவங்களோடும் வெண்பாவால் வெளி
விருத்தத்தால் கூடிய முறையால் அந்தாதியுறப் பாடுதல் அங்கமாலை எனக்
கூறுவர் என்றவாறு.
 

   முறை பாதாதிகேசம் கேசாதிபாதம் பிறழாமல் கூறல்.

 

   தொக்க உறுப்பு உள்ளங்கால் உகிர் விரல். 

         (75)