பாட்டியல்
- நூற்பா எண் 75 |
203 |
ஒத்த நூற்பாக்கள்
‘நிறுத்த வெளிவிருத்தம்
நீடுறுப்பில் வந்தால்
குறித்(து) அங்க மாலையாக்
கொள்க.’
- வெண். பாட். செ. 29
‘வடுவிலா வெண்பா விருத்தம்பல
அங்கமாலை என்னே.’
- நவ. 42
‘பாதாதிகேசம் கேசாதிபாதம்
அந்த
வகையுரைக்கின்
வெளிவிருத்தத்து அங்க மாலை.’
- சித. பாட். 35
‘அங்க மாலையே அங்க வகுப்பெலாம்
பாதாதி கேசமும் கேசாதி பாதமும்
கலிவெண்பா ஆதல்
வெளிவிருத்த மாதல்
வலிதெனப் புகழ்ந்து வகுத்த
செய்யுளே.’
- தொ. வி. 262
‘அங்க வகையை
விளம்பிய ஒழுங்கின்
வெளிவிருத் தத்தால்
வழுத்துவது அங்க மாலை ஆமே.’
- பி. ம. 26
‘மேவும் ஆண்மகனுடன் பெண்மகட்கு
உரியதாய்
வெண் பாவினா லாயினும்
வெளி விருத்தத்தினா லாயினும்
வழுவற
விளம்பு பாதாதி கேசம்
ஆவதாய்க் கேசாதி பாதம்வரை தொடர்புற
அரற்றுவது அங்க
மாலை.’
- பி. தீ. 9
‘ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்
மிகஎடுத்து உரைக்கும் மெய்அவ
யவத்தை
வெண்பா ஆயினும் வெளிவிருத்
தத்தின்
ஆயி னுங்கே சாதி பாதம்
பாதாதி கேச மாகப் பாடுவது
அங்க மாலையாம் ஆயுங்
காலே.’
- மு. வீ. யா. ஒ. 85
75
|