204 இலக

204

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

வசந்த மாலை

836. வசந்த வருணனை வசந்த மாலை.

 

இது வசந்தமாலை ஆமாறு கூறுகின்றது.

 

இ-ள்: தென்றலைவருணித்துஅந்தாதியாகப்பாடுதல்வசந்தமாலையாம்

என்றவாறு.

(76)

‘வசந்தனை வருணித்தல் வசந்த மாலை.’

-

 நவ. 4

‘விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே

மேலாம் வசந்தமாலை.’

-

 பி. தீ. 13

‘தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த

மாலை எனப்பெயர் வைக்கப் படுமே.’

-

 மு. வீ. யா. ஒ. 102

-

தொ. வி. 283 உரை

76

நவமணி மாலை

837. வெண்பா முதலா வேறோர் ஒன்பது

    நண்பாக் கூறல் நவமணி மாலை.

 

இது நவமணி மாலை ஆமாறு கூறுகின்றது.

    இ - ள்: வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும் ஒன்பது உற அந்தாதியாகப் பாடுதல் நவமணிமாலையாம் என்றவாறு.                        

 (77)

‘பாவே இனமே என்றிவை இரண்டும்

மேவிய வகையது நவமணி மாலை.’

-

 பன். பாட். 294

‘வாய்ந்த விருத்தங்கள் ஒன்பான் மணிமாலை.’

-

வெண். பாட். செ. 24

‘ஒன்பதவை ................ நவமணி மாலை,’

-

 நவ. 50