206
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட
ஆண்டகை யைப்பரணி ஆய்ந்துரைக்க - ஈண்டிய
நேரடியோ டாதியா நீண்டகலித் தாழிசை
ஈரடிகொண் டாதியுட னீறு.’
|
- |
வெண். பாட். செ.
38 |
‘புறநடைசேரக் கவைப்போருள் மேலிங்கிருவர்
மன்னர்
திறனுளும் யானைப் படைசெற்று வென்ற ஒருவன்செய்கை
நெறிபடு நேரடி யேமுதல் நீண்டன ஈரடியாய்ப்
பெறுவன தாழிசை யால்பர ணிப்பெயர் பேசுவரே.’
|
- |
நவ. 54 |
‘படைபுக்கா யிரம்வேழம் எதிரார் போரில்
படப்போர்செய் தானுக்குப் பரணிபாடே.’
|
- |
சித. பாட். 41 |
‘போர்முகத் தாயிரம் புகர்முகக் களிற்றைக்
கொன்றவ னுக்குப் பாடுவது பரணி.’
|
- |
மு. வீ. யா. ஒ. 79 |
78
பரணியின் இலக்கணம்
839.
கடவுள் வாழ்த்துக் கடைதிறப்பு உரைத்தல்
கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம்
கடிகணம் உரைத்தல் காளிக்கு அதுசொலல்
அடுபேய்க்கு அவள்சொலல் அதனால் தலைவன்
வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணையுற
வீட்டல் அடுகளம் வேட்டல் இவைமேல்
அளவடி முதலா அடிஇரண் டாக
உளமகிழ் பரணி உரைக்கப் படுமே.
இது
பரணி இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: கடவுள் வாழ்த்துமுதல் களம்விரும்பல்
ஈறாகச்
சொல்லப்பட்ட பொருள்மேல் அளவடி முதலாக
|