பாட்டியல் - நூற்பா எண் 79

207


 

எனைத்துச் சீரானும் இரண்டடியாகக் கேட்போர் உள்ளம் மகிழ்ச்சி கூரப்
பெரும் புலவரால் உரைக்கப்படும் பரணி என்றவாறு.
 

‘புறத்திணையுற ஈட்டல்’ என்றதனால் பாட்டுடைத் தலைமகனைச்
சிறப்பித்தலும் அவன் எடுத்துச் செலவு முறைமையும் மேல் புறத்திணையிற்

கூறிய முறையே செருமுடித்தலும் கூழட்டலும் முதலாயின எல்லாம்
சொல்லப்படும்.

(79)

ஒத்த நூற்பாக்கள்

‘மயக்கறு கொச்சகத்து ஈரடி இயன்று

நயப்புறு தாழிசை உறுப்பில் பொதிந்து

வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்

தும்பையில் சென்ற தொடுகழல் மன்னனை

வெம்புசின மாற்றான் தானைவெங் களத்தில்

குருதிப் பேராறு பெருகும்செங் களத்து

ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே.’

 - பன். பாட். 243

‘தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை

மேவி அமரும் காளி கோயில்

 

கன்னியை ஏத்தல் அலகை விநோதம்

கனாநிலை நிமித்தம் பசியே ஓகை

பெருந்தேவி பீடம் அழகுற இருக்க

அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா

மன்னவன் வாகை மலையும் அளவும்

மரபுஇனிது உரைத்தல் மறக்களம் காண்டல்

செருமிகு களத்திடைப் படுகூழ் வார்த்தல்

பரவுதல் இன்ன வருவன பிறவும்

தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.’                          

 - பன். பாட். 244