208
208

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

    ‘ஈறில் வணக்கம் கடைநிலம்பேய் என்பனவும்

     வீறுசால் ஐயைக்கு மெய்ப்பேய்கள் - கூறித்

     திறப்படச் சொல்லினவும் செப்பின் பிறவும்

     புறப்பொருள்நூல் கொண்டு புகல்.’   

- வெண். பாட். செ. 39

 

     ‘மற்றுஅது வானவர் வாழ்த்து, கடைவாழ்த்து, பாலைநிலப்

     பெற்றி, பெருங்கானகம், இறையோன் பெருந்தேவி மகிழ்ந்து

     உற்றுறை கோயில், அவளை உரைத்தல், அலகைக்குழாம்

     சுற்றிய வண்ணம் அவைதம் பசிப்பிணி சொல்லுதலே.’

                                                - நவ. 55

 

     ‘ஆங்குக்கனாத் துன்னி மித்தவகை அறிவித் திடலே

     பாங்கில் பணிமொழி பொன்முடி மன்னவர் தம்பகையால்

     தீங்கில் செருச்செய்து ஒருவர் திறல்வாகை சென்னிவைத்தல்

     ஈங்கிற்செல வேறுஒருபேய் உவகை இசைத்திடலே.’

                                                - நவ. 56

 

     ‘உண்டாம் உவகைதனை அவள்தான் மகிழ்ந்து ஓலக்கத்தில்

     கொண்டாடல் காளிஅம் பேயினைக்கூறல் கொலைக் களம்தான்

     கண்டு ஆர்ப்புஉறல் களம்வாழ்த்துதல் கைம்மலை

                                     வெண்மருப்புத்

     தண்டால் உலந்தவர் தம்பல் தரளம் தடுக்குதலே.’   

- நவ. 57

 

     ‘முடிஅடுப்பில் தோய்வயிறு குழிசியில் மொய்குருதி

     நெடிஉலைஏற்றி நிணம்பெய்து கோபநெருப்பு எரித்துத்

     தொடியுடைத் தோள்துடுப்பில் துழாய்ஆக்கிப்

                                           பேய்ஊட்டஅம்மை

     வடிவுறஉண்டு ஆங்கு அடுதிறல் மன்னனை வாழ்த்துதலே.

                                              - நவ. 58

 

     ‘இன்னும்அப் பேய்கள் இயல்கூர் பசிதீர உண்டுஇனிதாய்த்

     துன்னிநின்று ஆடுதல் சூழும்கவந் தங்கள் தான்ஆடுதல்

     மன்னும் புறப்பொருள் நூலோர்உரை வழுவா வகையே

     முன்னும் மொழிந்தபடியே புணர்த்திக்கொள் மொய்குழலே.’

                                              - நவ. 59