பாட்டியல்
- நூற்பா எண் 79 |
209 |
‘படைபுக்குஆ யிரம்வேழம் எதிரார் போரில்
படப்போர்செய் தானுக்குக் கடவுள் வாழ்த்துக்
கடைதிறப்புப் பாலைநிலம் காளி கோட்டம்
கழுதுநிலை காளிக்குப் பேய்சொல் பேய்க்குத்
தொடர்காளி சொலஅதனால் தலைவன் கீர்த்தி
சொல்லல்அவன் சேறல்புறப் பொருள்தோன் றப்போர்
அடுதல்களம் விரும்பல்இவை நாற்சீர் ஆதி
அடிஇரண்டின் ஏறாமல் பரணி பாடே.’
- சித. பாட். 41
‘படைபுக்கு ஆயிரம் பகடுஅற ஒன்னார்
போரில் எதிர்ந்து பொரும்அர சனுக்குக்
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை
நிலம், காளி கோட்டம், கழுது,
காளிக்குப் பேய்சொலல்,
பேய்க்குக் காளிசொலல்,
அதனால் தலைவன்
கீர்த்தியை அருளுதல்,
அவன் செலல்,
புறப்பொருள் தோன்ற ஆர்ப் பரித்துப்
போராடல், பொருகளம் விரும்பல் இவற்றை
நாற்சீர் ஆதியின் நண்ணுஈ ரடியின்
ஏறாது பரணி இயம்புதல் நெறியே.’
- பி. ம. 40
‘பரணிக்கு ஆயிரம் பகடு கொன்ற
தெரிவருந் தலைவனாய்த் தேவவாழ்த்து ஆதி
கடைதிறப் பும்கனல் காய்நிலம் பாலையும்
புடையில் காளி பொலிந்த கோயிலும்
பேயோடு காளி பேய்கள் காளியோடு
ஓவில உரைத்தலின் ஓர்ந்துஅவன் கீர்த்தி
புகறலும் அவன்வழி புறப்பொருள் தோன்றவும்
மிகவெஞ் சமரம் விரும்பலும் என்றிவை
அளவடி முதல்பல அடியான் ஈரடி
உளபஃ றாழிசை உரைப்பது நெறியே.’
- தொ. வி. 259
27-28
|