210
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘வெம்போர்
முகத்து ஆயிரம் யானையைக் கொன்ற
வீரனைத் தலைவனாக
வேண்டிப் புகழ்ந்துபின் கடவுளரை வாழ்த்தலும்
வேல்இளைஞர் கடைதிறப்பு
வண்பாலை
யில்காளி கோயிலில் காளிதான்
வன்பேய்க ளோடுஆடியும்
மற்றும்ஒரு கூளிப்பேய் சொல்கருது தலைவனான்
மாறாதகீர்த்தி பொங்கப்
பண்பாய
வன்வழிப் பிறபொருள்கள் தோன்றஉ
பாயமாம் சமரம்விரும்
பலும்அவன் வெற்றியைக் கருதிஇரு சீரடிப்
பாவும்முச் சீரடியும்முற்
செம்
பாகமாக நாற்சீர்முதல் அமைந்திடச்
சீர்உற்றஅடி இரண்டாய்ச்
செப்புபஃ றாழிசையின் ஓர்கவி தையாய்ச்
செப்பிடின் பரணிஆமே.’
- பி. தீ. 6
‘போர்முகத்து ஆயிரம் புகர்முகக் களிற்றைக்
கொன்றவ னைத்தலை மகனாகக் கொண்டு
கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புப்பாலை
காளி கோயிலும் பேயொடு காளியும்
காளியொடு பேய்களும் உரைக்கத் தானகம்
சாற்றக் கருதிய தலைவன் கீர்த்தி
புலப்பட அவன்வழி யாகப் புறப்பொருள்
தோன்றப் போர்த்தொழில் தொடங்க விரும்பல்
என்றிவை எல்லாம் இருசீர் முச்சீர்
அடிஒழித்து ஏனைய அடிகொடு ஈரடிப்
பஃறா ழிசையால் பாடுவது பரணி.’
- மு. வீ. யா. ஒ. 79
79
தசாங்கப்
பத்து
840.
நேரிசை வெண்பா வால்நிரு பன்பெறும்
தசாங்கத் தினைச்சொலல் தசாங்கப் பத்தாம்.
இது
தசாங்கப் பத்து ஆமாறு கூறுகின்றது.
|