212
212

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

பதிற்றந்தாதி

 

841. வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப்

    பண்புற மொழிதல் பதிற்றந் தாதி.

 

இது பதிற்றந்தாதி ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: பத்து வெண்பா பத்துக் கலித்துறை பொருள் தன்மை
தோன்றப் பாடுதல் பதிற்றந்தாதியாம் என்றவாறு.           

   81

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘ஒத்தாய வெண்பா.......ஒத்தசீர்

     அந்தாதி ஆகும் கலித்துறையும் அவ்வகையே

     வந்தால் அதன்பே ரவை.’           

 - வெண். பாட். செ. 9

 

     ‘பத்துவெண் பாக்கலித்துறையான் தற்செயலாம்

                             பதிற்றந்தாதி.’        

- நவ. 7

 

     ‘பத்துவெண்பா கலித்துறை பத்துடன் பொருள்

          பற்றிடும் தன்மை தோன்றப்

 

 

 

     பலசிறப்புற்ற அந்தாதியாய்ப் பாடுவது

          பண்பதிற் றந்தாதியாம்.’                 

 - பி. தீ. 19

 

     ‘ஈரைந்து வெண்பா கலித்துறை ஈரைந்து

     தரும்பொருள் புலப்பட அந்தா தித்துப்

     பாடுவன பதிற்றந் தாதி ஆகும்.’      

  - மு. வீ. யா. ஒ. 122

                                      - தொ. வி. 282 உரை.

                                                      81

 

நூற்றந்தாதி

 

842. நூறு வெண்பா நூறு கலித்துறை

    கூறுதல் நூற்றந் தாதிக் கோளே.

 

இது நூற்றந்தாதி இலக்கணம் கூறுகின்றது.