பாட்டியல்
- நூற்பா எண் 82,83 |
213 |
இ - ள்: வெண்பா நூறு கலித்துறை நூறு அந்தாதித் தொடையால் கூறுதல்
நூற்றந்தாதி இலக்கணக கொள்கையாம் என்றவாறு.
(82)
ஒத்த நூற்பாக்கள்
‘வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருளில்
பண்பா உரைப்பதந் தாதித் தொகையே.’
- பன். பாட். 330
‘ஒத்தாய வெண்பா ஒருநூறா - ஒத்தசீர்
அந்தாதி ஆகும் கலித்துறையும் அவ்வகையே
வந்தால் அதன்பே ரவை.’
- வெண். பாட். செ. 9
‘கலித்துறை நூறு வெண்பாத் தோன்றுதலாகும்
நூற்றந்தாதி என்பர்.’
- நவ.
6
‘மன்னிய கலித்துறை வெள்ளை நூறு
அந்தாதித்து அப்பெயர் அந்தாதி
ஆகும்.’
- பி. ம. 8
‘வெற்றி வெண்பா நூறினாலும் கலித்துறையின்
வீறுறும் நூறினாலும்
வினவி அந்தாதித்து உரைத்தல் நூற்றந்தாதி.’
- பி. தீ.
19
‘வெண்பா நூற்றினா லேனும் கலித்துறை
நூற்றினா லேனும் அந்தாதித் துரைப்பது
நூற்றந் தாதியாம் நுவலுங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 123; தொ. வி. 283.
உரை.
82
அட்டமங்கலம்
843. கடவுள் காக்க எனக்கவி இருநான்கு
அடைவுற அகவல் விருத்தம் அதனால்
வகுப்பது அட்ட மங்கலம் ஆகும்.
இஃது அட்டமங்கலம் ஆமாறு கூறுகின்றது.
|