214

214

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


இ - ள்: கடவுளைப்பாடி அக்கடவுள் காக்க எனக் கவி எட்டால் பொருளுற அகவல் விருத்தம் அதனால் பாடப்படுவது அட்டமங்கலமாம்
என்றவாறு.                        

 (83)

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘ஒருவனைக் காக்கஎன்று இறைவனை ஏத்திய

     எண்வகை அகவல் விருத்தம் புணர்த்த

     எண்ணிய அட்ட மங்கலம் என்ப.’     

 - பன். பாட். 299

     ‘இறைவனை ஏத்திய எண்வகை மங்கலம்

     மறிதரும் பாவே அகவல் விருத்தம்.’             

’’    300

     ‘வேய்ந்த விருத்தங்கள் எட்டுஅட்ட மங்கலமாம்.’

                                       - வெண். பா. செ. 24

     ‘இறைவனை ஏத்திய எட்டுஆசிரிய விருத்தம் வண்ணம்

     மறைமுதலோர் அட்டமங்கலம் என்ப.’            

 - நவ. 50

     ‘எட்டுக் குலவுஅகவல் விருத்தமுறு தெய்வக் காப்பாம்

          மீதட்ட மங்கலம்.’                  

  - சித. பாட். 34

     ‘அட்ட மங்கலம் எட்டு மனவிருத்தம்

     கவிதோறும் தெய்வம் காப்பஎன்று உரைப்பது.’

                                           - தொ. வி. 274

     ‘விரும்பும் எட்டுமன விருத்தந் தோறும்

     தெய்வம் காப்பாய்ச் சிறந்து சுபகரத்து

     அந்தாதித்து இயம்பல் அட்டமங் கலமே.’      

 - பி. ம. 22

     ‘அரிய கடவுளர் மீது பாடி அக்கடவுளே

          அநுதினம் காக்க எனவும்

     தாவில் ஆசிரிய விருத்தம் எட்டுஅந்தாதி சாற்று

          அட்ட மங்கலம் தான்.’              

- பி. தீ. 9

     ‘கடவுளைப் பாடிஅக் கடவுள் தானே

     காக்கஎன்று அகவல் விருத்தம் இருநான்கு

     அந்தாதித்து அறைகுவது அட்டமங் கலமே.’

                                      - மு. வீ. யா. ஒ. 86

                                                    83