பாட்டியல்
- நூற்பா எண் 84 |
215 |
அலங்கார பஞ்சகம்
844. வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
எள்ளலில் வண்ணம் இவைஓர் ஐந்தும்
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப.
இஃது அலங்கார பஞ்சகத்தின் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: வெண்பாவும் கலித்துறையும் அகவலும் விருத்தமும் இகழ்தல்
இல்லாச் சந்த விருத்தமும் ஆகிய இவை ஓரைந்தினையும் அந்தாதியாகப் பாடுதல் அலங்காரப் பஞ்சகம்
என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
(84)
ஒத்த நூற்பாக்கள்
‘வெள்ளை, செறிந்த கலித்துறைசீர் மன்பா - அறைந்த
கலங்காத மன்விருத்தம் காண்டகைய வண்ணம்
அலங்கார பஞ்சகமென் றார்.’
- வெண். பாட். செ. 22
‘வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்.’
- நவ. 41
‘ஓதுவெள்ளை கலித்துறையா சிரிய வஞ்சி
உறுவிருத்தம் வகுப்புஐந்தால் உரைக்கில் அம்ம
கோதில்அலங் காரபஞ்ச கப்பேர்.’
- சித. பாட்.
34
‘ஆதிப்பா கலித்துறை ஆசிரியம் வஞ்சி
மனவிருத் தத்தோடு வண்ணம் இசைய
ஐந்தின் அலங்காரத்து அந்தா தித்துப்
பாடுவது அலங்கார பஞ்சகம் என்ப.’
- பி. ம. 21
‘வெண்பா கலித்துறை அகவல் விருத்தம்
அலங்கார பஞ்சகம் அந்நால் வகைப்பாக்
கலந்த ஐந்தாய்க் கதிபெறப் பாடலே.’
- தொ. வி.
282
|