216 இலக

216

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

அத்தகு ஆசிரிய விருத்தம் கலித்துறை

      அகவல் சந்தவிருத்தமும்

ஆம் வெள்ளையும் மாறி அந்தாதிசெயும்நூறு

      அலங்கார பஞ்சகமே.’

- பி. தீ. 24

‘வெண்பா அகவல் கலித்துறை அகவல்

விருத்தம் சந்த விருத்தம்இவ் வகையே

மாறி மாறி அந்தாதித் தொடையாய்ப்

பாடுவது அலங்கார பஞ்சகம் ஆகும்.’

- மு. வீ. யா. ஒ. 147

84

ஊசல்

845. அகவல் விருத்தம் கலித்தா ழிசையால்

பொலிதரு கிளையொடும் புகலுவது ஊசல்.

 

இஃது ஊசல் ஆமாறு கூறுகின்றது.

 

இ - ள்: ஆசிரிய விருத்தத்தானாதல் கலித்தாழிசையான் ஆதல்
சுற்றத்தாரோடும் பொலிவதாகக் கூறுதல் ஊசலாம் என்றவாறு.

(85)

ஒத்த நூற்பாக்கள்

 

‘ஆங்கவிருத் தத்தால் அறைந்தகலித் தாழிசையால்

ஓங்கியசுற் றத்தளவாய் ஊசலாம்.’

- வெண். பாட். செ. 23

 

‘தொடர் மன்விருத்தம் கலித்தாழிசை சுற்றத்தோடு பொலிந்

திடுக என்று ஆடீர் ஆடாமோ ஊசல் பொலன் ஊசலதே.

- நவ. 13

‘சொற்கலித்தா ழிசையகவல் விருத்தம் ஆதல்

சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்.’

- சிதம். பாட். 83