பாட்டியல்
- நூற்பா எண் 85,86 |
217 |
‘ஆசிரிய விருத்தம் கலித்தா ழிசையில்
ஒன்றா ஒன்பான் தாழிசைப் போக்கின்
சுற்றத்து அளவில் சொல்லுவது ஊசல்.’
- பி. ம. 18
‘ஊசல் என்ப ஊசலாய்க் கிளையளவு
ஆசிரிய விருத்த மாகப் பாடலும்
தன்ஒலி வரும்கலித் தாழிசைப் பாடலும்
வண்ணகம் முதற்கண் வரினும் இயல்பே.’
- தொ. வி. 276
‘அகவல் விருத்தத் தானா குதல்கலித்
தாழி சையா னாகுதல் சுற்றத்
தோடும் பொலிக ஆடீர் ஊசல்
ஆடாமோ ஊசல் ஊச லாகும்.’
-
மு. வீ. யா. ஒ. 161
85
சின்னப்பூ
846.
மிக்க நேரிசை வெண்பா அதனால்
தக்க தசாங்கந் தன்னை நூறு
தொண்ணூறு எழுபது ஐம்பது முப்பஃது
எண்ணப் பாடின் சின்னப் பூவே.
இது
சின்னப்பூவினது இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: சிறந்த நேரிசை வெண்பாவினால் தகுதி பெற்ற
தசாங்கத்தினை நூறு
தொண்ணூறு எழுபது ஐம்பது முப்பது என்னும்
எண்படப் பாடின் அது
சின்னப்பூவாம் என்றவாறு.
அரசனுடைய சின்னங்களை விரித்துக் கூறுதலான்
சின்னப்பூ ஆயிற்று.
86
|