218

218

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘மலையும் ஆறும் நாடும் ஊரும்

     பரியும் களிறும் கொடியும் முரசும்

     தாரும் பெயரும் எனத்தெரி பத்தும்

     சொல்லும் எல்லையின் முதற்குறட் கண்ணே

     சின்னத் தொழிலை மன்ன வைத்துப்

     பின்னர்க் குறளுள் பாட்டுடைத் தலைவன்

     இயற்பெயர் வைத்தவர்க் குரிமைத் தோன்றும்

     செயல்பெற வைப்பது சின்னம் அதுவே

     ஆதிப் பாவின் அதன்இனம் வருமே.’  

- பன். பாட். 239

 

     ‘மலையே யாறே நாடே ஊரே

     பறையே பரியே களிறே தாரே

     பெயரே கொடியே என்றிவை தசாங்கம்.’   

  ’’    240

 

     ‘பத்தே ஏழே மூன்றே சின்னம்.’           

 ’’    241

     நேரும் தசாங்கத்தை நேரிசை வெண்பாவால்

     ஈரைம் பதுதொண்ணூ றீண்டெழுபான்

- ஓரைம்பான்

     தேர்ந்துரைக் கின்சின்னப் பூ.       

- வெண். பாட். செ. 20

 

     ‘நேரும் தசாங்கத்தினை நேரிசை வெண்பாவில் ஈரைம்பது

     சேர ஓர்தொண்ணூறு எழுபதோடு ஐம்பது செப்பிடுங்கால்

     ஆரியர் சின்னப்பூ என்றே உரைப்பர்.’         

 - நவ. 39

 

     ‘தசாங்கம்தன்னை,

     வெண்பாவால் தொண்ணூறுஏழ் பஃது ஐம்பான்

          இத்தகைமை மொழிவது சின்னப்பூ ஆகும்.’

                                     

 - சிதம். பாட். 32

 

     ‘வெள்ளை பத்தில் தசாங்கத்தைப் புகழ்ந்து

     பகர்தல் தசாங்கப் பத்தாம்; அவற்றைத்

     தொண்ணூறு எழுபஃது ஐம்பான் வெள்ளையில்

     அமைவுற மொழிதல் ஆகும்சின் னப்பூ.      

- பி. ம. 16

 

     ‘சின்னப்பூ எனத்தெளி நேரிசை வெண்பா

     நூறு தொண்ணூறு எழுபதுஐம்பது ஆறைந்துமாய்ப்

     பாடித் தசாங்கம் பற்றிப் புகழ்வதே.’        

 - தொ. வி. 263