பாட்டியல் - நூற்பா எண் 86,87

219


 

‘நேரிசை வெண்பா வாலே நிருபன்

சின்னமாம் தசாங்கத் தினைச்சிறப் பித்து

விரித்துஐம் பதுதொண் ணூறுஎழு பதுமுப்

பதுநூறு எனும்எண் படஎடுத் துரைப்பது

சின்னப் பூஎனச் செப்பினர் புலவர்.’

- மு. வீ. யா. ஒ. 164

86

சதகம்

847. விழையும் ஒருபொருள் மேல்ஒரு நூறு

    தழைய உரைத்தல் சதகம் என்ப.

 

இது சதகம் ஆமாறு கூறுகின்றது.

 

இ - ள்: கற்று வல்லோரால் விரும்பும் அகப்பொருள் ஒன்றன் மேலாதல்
புறப்பொருள் ஒன்றன் மேலாதல் கற்பித்து நூறு கவி பாடுதலே சதகமாம்.

(87)

ஒத்த நூற்பாக்கள்

 

சயமாம் மிகுபொருள் ஒன்றின் பாநூறு சதகமதே.’

 

-

நவ. 10

‘கருது பொருள்இடம் காலம் தொழிலின்

நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்

மன்னும் அவ்வெண்ணால் சதகம் என்று

இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே.’

 

-

பி. ம. 34

‘அகப்பொருள் ஒன்றன்மேல் ஆதல் புறப்பொருள்

ஒன்றன்மேல் ஆதல் கற்பித்து ஒருநூறு

செய்யுள் உரைப்பது சதகமாம் என்ப.’

-

மு. வீ. யா. ஒ. 156; தொ. வி. 283 உரை.

87