New Page 1

22     

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


         

பா - திணை

           

         வெண்பாவிற்கு முல்லையும், ஆசிரியப்பாவிற்குக் குறிஞ்சியும்,
கலிப்பாவிற்கு மருதமும், வஞ்சிப்பாவிற்கு நெய்தலும், மருட்பாவிற்குப்
பாலையும் உரிய  திணைகளாம்.
    

பா - நிறம்

    

            வெண்பாவிற்கு வெள்ளைநிறனும், ஆசிரியப்பாவிற்குச்
செம்மை நிறனும்,  கலிப்பாவிற்குக் கருமை நிறனும், வஞ்சிப்பாவிற்குப்
பொன்மை நிறனும்  உரியனவாம்.

    

பா - நாள்

    

            கார்த்திகை முதலாக ஆயில்யம் ஈறாகிய ஏழு நாள்களும்
வெண்பாவிற்கும்,  மகம் முதலாக விசாகம் ஈறாகிய ஏழு நாள்களும்
ஆசிரியப்பாவிற்கும், அநுடம் முதலாக அவிட்டம் ஈறாகிய ஏழு
நாள்களும் கலிப்பாவிற்கும், சதயம் முதலாக பரணி ஈறாகிய ஆறு
நாள்களும் வஞ்சிப்பாவிற்கும் உரியனவாம்.
    

பா - இராசி

    

         வெண்பாவின் இராசிகள் கடகம் விருச்சிகம் மீனம் என்பன.
  ஆசிரியப்பாவின் இராசிகள் மேடம் சிங்கம் தநு என்பன.
  கலிப்பாவின்  இராசிகள் மிதுனம் துலாம் கும்பம் என்பன. வஞ்சிப்பாவின்
  இராசிகள் இடபம்  கன்னி மகரம் என்பன.

பா - கோள்

 

        திங்களும் வியாழனும் வெண்பாவிற்கும், சூரியனும் செவ்வாயும்
  ஆசிரியப்பாவிற்கும், புதனும் சனியும் கலிப்பாவிற்கும், சுக்கிரனும் இராகு
  கேதுக்களும் வஞ்சிப்பாவிற்கும் உரிய கோள்களாம்.

பா - மலர் முதலியன

    

            பூவும் சந்தனமும் கலையும் அணியும் வெண்பாவிற்கு
  வெள்ளை நிறத்தனவாயும், ஆசிரியப்பாவிற்குச் செம்மை நிறத்தனவாயும்,
  கலிப்பாவிற்குக் கருமை நிறத்தனவாயும் வஞ்சிப்பாவிற்குப் பொன்மை
  நிறத்தனவாயும் கொள்ளுதல் வேண்டும்.