220
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
எண்
செய்யுள்
848.
ஊரையும் பெயரையும் உவந்துஎண் ணாலே
சீரிதின் பாடல்எண் செய்யுள் ஆகும்.
இஃது
எண்செய்யுள் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: பாட்டுடைத் தலைவனுடைய ஊரினையும் பெயரினையும்
உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரம் அளவும் பொருள்
சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் வெண்ணால் பெயர் பெற்று
நடக்கும் எண் செய்யுளாம் என்றவாறு.
அவை முத்தொள்ளாயிரம் அரும்பைத்தொள்ளாயிரம்
முதலாயின.
‘சீரிதின்’ என்றதனால் செய்யுட்கிழமைப்
பொருள் பற்றிப் பாரியதுபாட்டு கபிலரதுபாட்டு எனச்
செய்வித்தோன் செய்தோன் பெயர் பற்றி வரும்
எனவும்கொள்க.
88
விளக்கம்
ஆறாவதற்குரிய தெரிந்து மொழிச் செய்தி -
பாரி காரணமாகப் பாடப்பட்ட பாரி பாட்டு, கபிலரால்
பாடப்பட்ட கபிலர் பாட்டு என்றாற்போல முறையே செய்வித்தோன்
செய்தோன் இருவர் பற்றியும் தோன்றும் என்பது.
‘பெயர்ஊர் பத்துமுதல் ஆயிரம் எண்பெயர் எண்
செய்யுளாம்.’
|
- |
நவ. 17 |
‘ஒத்திடும் பாட்டுடைத்தலைவன் ஊர்ப் பெயரினை
எடுத்தும் எண்ணால் பெயர்பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம்வரை சொல்லல்
எண்செய்யுள் ஆகுமன்றே.’
|
- |
பி. தீ. 15 |
|