பாட்டியல் - நூற்பா எண் 88,89

221


 

     ‘பாட்டுடைத் தலைவன் ஊரும் பெயரும்

     பத்துமுதல் ஆயிரம் அளவும் பாடி

     எண்ணால் பெயர்பெறல் எண்செய்யுள் ஆகும்.’

                   - மு. வீ. யா. ஒ. 119; தொ. வி. 283 உரை

                                                     88

 

ஐந்திணைச் செய்யுள்

 

849. உரிப்பொருள் தோன்ற ஓரைந் திணையும்

    தெரிப்பது ஐந்திணைச் செய்யுள் ஆகும்.

 

இஃது ஐந்திணைச் செய்யுள் இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: புணர்தல் முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக் கூறுதல் ஐந்திணைச் செய்யுளாம் என்றவாறு.            

 (89)

 

ஒத்த நூற்பாக்கள்

 

‘கூடல் முதல் ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறிஞ்சியோடு

ஐந்திணையினைக் கூறுப ஐந்திணைச் செய்யுள் என்பர்.’  

 - நவ. 3

 

     ‘வருபுணர்தல் முதல் ஐந்துஉரிப்பொருள் பிரகாசிக்க

          வரைஆதியை ஐந்திணை

     வகுத்துச் சிறப்பித்தல் ஐந்திணைச் செய்யுள்வெள்ளை

          வஞ்சி கலிவணம் அகவலே.’              

 - பி. தீ. 8

 

     ‘புணர்தல் முதலிய ஐந்துஉரிப் பொருளும்

     அணிபெறக் குறிஞ்சி முதலிய ஐந்திணை

     யினையும் இயம்புவது ஐந்திணைப் பாவே.’

                                      - மு. வீ. யா. ஒ. 82

                                      - தொ. வி. 283 உரை.

                                                                                                                                                                                89