222
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
நாழிகை வெண்பா
850. தேவர் அரசர் திறன்நே ரிசையால்
மேவும் கடிகையின் மேற்சென் றதனை
நாலெட்டு உறச்சொலல் நாழிகை வெண்பா.
இது நாழிகை வெண்பா ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: தேவர் இடத்தும் அரசர் இடத்தும் நிகழும் காரியம்
கடிகை
அளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாக் கூறல் நாழிகை
வெண்பாவாம் என்றவாறு.
(90)
ஒத்த நூற்பாக்கள்
‘ஈரிரண்டு யாமத்து இயன்ற நாழிகைச்
சீர்திகழ் வெண்பாப் பாடுநர் யாவரும்
இருநான்கு ஈரேழ் இருநான் காம்எனக்
கன்னல் முப்பதும் எண்ணினர் இனிதே.’
- பன். பாட். 292
‘மன்னர் கடவுளர் முன்னிலை யாக
அன்ன கடிகை என்னும் இயல்பின்
தொகுநெறி அன்னவை நேரிசை வெண்பா.’
’’
293
‘போம்கடிகை,
தேவர்க்கும் காவலர்க்கும் தேர்ந்துரைக்க வெண்பாவை
மேவிய நாலெட்டாக வேய்ந்து.’
- வெண். பாட். செ. 23
‘கடவுள் அரசர்க்கண் நிகழ்கருமம் கடிகையினின்
முடியும் முப்பான்இரு நேரிசைவெண்பாக் கடிகைவெண்பா
52ல் பிறிதும் கூறும்.’
- நவ. 18
‘ஏய்ந்திடு நாழிகைவெண்பா மன்னர்க்கு ஈசர்க்கு
எய்திய நாழிகைவெண்பா நாலெட்டாய்ச் சொலல்.’
- சித. பாட். 40
‘ஈசற்கு மண்ஆள் மன்னற்கு எண்ணான்கு
திருந்து நாழிகையின் சிறப்பைவெண் பாவால்
நவில்வது ஆகும் நாழிகை வெண்பா.’
-
பி. ம. 38
|