பாட்டியல் - நூற்பா எண் 90,91

223


 

    ‘அமரர் இடத்தும் அரசர் இடத்தும்

     நடக்கும் காரியம் நாழிகை அளவில்

     தோன்றி ஒழுகுவ தாகமுப் பானோடு

     இரண்டு நேரிசை வெண்பா இயம்பல்

     கடிகைவெண் பாஎனக் கருதினர் புலவர்.’

                    - மு. வீ. யா. ஒ. 163; தொ. வி. 283 உரை.

                                                     90

 

நானாற்பது

 

851. காலம் இடம்பொருள் கருதி நாற்பான்

    சால உரைத்தல் நானாற் பதுவே.

 

இது நானாற்பது ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: காலமும் இடமும் பொருளும் பற்றி நாற்பது வெண்பாப்
பொருந்த உரைத்தல் நானாற்பதாம் என்றவாறு.

 

     காலம் பற்றி வருவது கார்நாற்பது. இடம் பற்றி வருவது களவழி
நாற்பது. பொருள் பற்றி வருவன இன்னா நாற்பது இனியா நாற்பதாம்
இன்னா ஆக்குதலை இன்னா என்றும் இனிமை ஆக்குதலை இனியா என்றும்
கூறினார்.                                         

 (91)

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘சார்பொருள் காலத்தின் முற்பா நாற்பது.’         

 - நவ. 10

 

          ‘உற்றிடும் காலமும் இடமும்

     பொருளும்ஆகிய இவற்றுள்ளின் ஒவ்வொன்றினைப்

          பொருந்தி நாற்பது வெள்ளையால்

     புகல்வதே நாற்பதுஆம்.’                          

 - பி. தீ. 26

 

     ‘இடம்பொருள் காலம் இவற்றில் ஒன்றனை

     வெண்பா நாற்பதால் விளம்பல்நா நாற்பது.’

                   - மு. வீ. யா. ஒ. 152;  தொ. வி. 283 உரை.

                                                     91