224 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
முலைப்பத்து, நயனப்பத்து
852. பணைமுலை நயனத் தினைப்பப் பத்தால்
அணைவுறப் புகறல் அப்பத் தாகும்.
இது பயோதரப்பத்தும் நயனப்பத்தும் ஆமாறு கூறுகின்றது.
பொருள் வெளிப்படை.
92
ஒத்த நூற்பாக்கள்
‘பணைமுலை நயனம் பாங்காம் அகவல்
விருத்தம் பத்தென விளம்பினர் புலவர்.’
- பன். பாட். 333
‘ஆகிய கண்முலை அகவல் விருத்தம்.’
’’ 334
‘தந்துரைத்த மன்விருத்தம் சார்ந்த கலித்துறைதான்
அந்தமுறும் கண்முலைமேல் ஐயிரண்டாய் - வந்தால்
நயன பயோதரப்பத் தாமென்று நன்னூல்
பயனுணர்ந்தார் முன்பு பகர்.’
- வெண். பாட். செ. 25
‘நயனம் பயோதரம் பப்பான்நவிலல் அந்நாமம்’
- நவ. 9
‘அரசர்விருத்தம் கலித்துறை ஈரைந்து கண்முலைமேல்
பரசின்நயனம் பயோதரம் சேர்ந்த விருத்தம் என்ப.’
- நவ. 49
‘பயோதரம்கண் உரைத்திடில்அப் பேர்பத்து ஆமால்’
- சிதம். பாட். 31
‘மன்னு பயோதரம் ஆகும் உறுப்பை
ஆசிரிய விருத்தம் கலித்துறை ஒன்றின்
ஏற்கவரு ணித்து ஈரைந்து சொல்வது
அப்பெயர்ப் பத்துஎன்று அறையப் படுமே.’
- பி. ம. 15
|