பாட்டியல்
- நூற்பா எண்
92,93 |
225 |
‘மன்னும் அம்பகம் ஆகும் உறுப்பை
ஆசிரிய விருத்தம் கலித்துறை ஒன்றின்
ஏற்க வருணித்து ஈரைந்து சொல்வது
அப்பெயர்ப் பத்துஎன்று அறைந்தனர் புலவர்.’
- பி. ம. 15
‘நாட்டந்தனை தசச்செய்யுளால் கூறல்
நயனப்பத்து எனப் புகலுவார்.’
- பி. தீ. 23
‘நனிமுலையைத் தசச் செய்யுளால் கூறுவது
நற்பயோதரப்பத்து இதே.’
- பி. தீ. 23
‘பார்வையைப் பத்துப் பாட்டால் உரைப்பது
நயனப் பத்தென நவிலப் படுமே.’
‘பருமுலைப் பத்துப் பாவால் அறைவது
பயோதரப் பத்தெனப் பகரப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 143, 144; தொ. வி. 283 உரை.
92
ஒன்பான் வகை விருத்தம்
853. வில்வாள் வேல்செங் கோல்மத மாபரி
நாடுஊர் கொடையை நயந்த பப்பத்து
விருத்தம் ஒன்பதும் விளங்கும்அப் பெயரான்.
இது வில் முதலிய ஒன்பதுவகை விருத்தம் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: வில்லினையும் வாளினையும் வேலினையும் செங்கோலினையும்
யானையினையும் குதிரையினையும்
நாட்டினையும் ஊரினையும்
கொடையினையும் பப்பத்தாகக் கூறும் ஒன்பதுவகை விருத்தங்களும்
அவ்வப்பெயரான்
விளங்கும் என்றவாறு.
29-30
|