224 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
என்றது வில்விருத்தம் வாள்விருத்தம் வேல்விருத்தம் செங்கோல்
விருத்தம்
யானைவிருத்தம் குதிரைவிருத்தம் நாட்டுவிருத்தம் ஊர்விருத்தம்
கொடைவிருத்தம் எனப்
பெயர் பெற்று வழங்குவனவாம்
என்றவாறு.
(93)
ஒத்த நூற்பாக்கள்
‘வரிசிலை யானை வாள்குடை வேல்செங்
கோலொடு நாடு உரைப்பில் அகவல்
விருத்தம் பத்தென வேண்டினர் புலவர்.’
- பன். பாட். 290
‘நிலையார் குடைசெங்கோல் ஊர்நாடு நீள்வேல்
கொலையார் களிறு குதிரை - சிலைவாள்
இவற்றின்மேல் மன்விருத்தம் ஈரைந்தாய் வந்தால்
அவற்றின்பேர் நாட்டல் அறிவு.’
- வெண். பாட். செ. 21
‘யானைகுதிரை எழில்வில்வேல் வாள்குடைகோல் இவற்றோடு
ஊனமில் நாடு நகர்என ஒன்பான் இவற்றின்பப்
பானகவல் விருத்தம்வர அப்பால் விருத்தமதாம்.’
- நவ.
40
‘எழிற்குடைசெங் கோல்நாடுஊர் வில்வாள் வேல்மா
அத்திதனித் தனிஅகவல் விருத்தம் பத்தால்
அறைவிருத்த இலக்கணமாம்.’
- சிதம். பாட். 32
‘எழில்குடை செங்கோல் நாடுஊர் சிலைவாள்
அணிவேல் பரிதந்தி இவற்றைத் தனியே
அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
உரைக்கின் அவ்வவ் விருத்தம்
ஆகும்.’
-
பி. ம. 17
‘விருத்த இலக்கணம் விளம்புங் காலை
குடைஊர் நாடுகோல் பரிகரி வில்வடி
வாள்வேல் ஒன்பான் வகுப்பு மனவிருத்தம்
ஈரைந்து அவ்வவற்று இயற்பெயர் கொளுமே.’
- தொ. வி. 273
|