பாட்டியல் - நூற்பா எண் 93,94

227


 

     ‘வில்வா ளொடுவேல் செங்கோல் யானை

     குதிரை நாடுஊர் குடைஇவ் வொன்பதும்

     பப்பத்து அகவல் விருத்தத் தாலே

     ஒன்பது வகையுற உரைப்பது விருத்த

     இலக்கணம் என்மனார் இயல்புணர்ந் தோரே.’

                                      - மு. வீ. யா. ஒ. 165

                                                     93

 

காப்பியம்

 

854. காப்பியம் இரண்டும் மேற்புகன் றனவே.

 

இது காப்பியத்தின் இலக்கணம் மாட்டேற்றான் உணர்த்துகின்றது.

 

     இ - ள்: பெருங்காப்பியத்தினுக்கும் காப்பியத்தினுக்கும் மேல் அணிஇயலுள் கூறிப்போந்த இலக்கணமே ஈண்டைக்கு உரிய இலக்கணமாம் என்றவாறு.                              

 (94)

விளக்கம்

 

     ‘பெருங்காப்பிய நிலை’ (இ. வி. 628). ‘அறம் முதல் நான்கின்’ (இ. வி. 630) என்ற நூற்பாக்களை நோக்குக.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘தொடர்நிலைச் செய்யுள் பலபாட்டுத் தொடுத்துத்

     தலைஇடை கடைஎன நுவலவும் படுமே.’

- பன். பாட். 351

 

     ‘அவற்றுள்,

     தலைஎனப் படுபவை மலைவின் றாகி

     அறம் பொருள் இன்பம் வீடென இவற்றின்

     திறம்தெரி மரபின் நீங்கா தாகி

     வென்றிகொள் இருக்கை என்றிவை அனைத்தும்

     சந்தி யாகத் தந்துநிலை பெறுமே.’        

  ’’    352