பாட்டியல் - நூற்பா எண் 94

229


 

     ‘கருதுசில குன்றினும்அக் காப்பியமாம் என்பர்

     பெரிதறமே ஆதி பிழைத்து - வருவதுதான்

     காப்பிய மாகும் குலவரவு காரிகை

     யாப்பிற் புராணமே யாம்.’           

 - வெ. பா. செ. 43

 

     ‘முன்னம் வணக்கம் அறம்முதல் நான்கின் திறமுரைத்தல்

     தன்னிக ரில்லாத் தலைவனைக் கூறல் தசாங்கங்களை

     வன்னித்தல் வாழ்த்தல் பருவம் இருசுடர்த் தோற்றம்வளம்

     இன்னன கூறல் பெருங்காப் பியத்துக்கு இலக்கணமே.’

                                           - நவ. 60

 

     ‘பொன்முடி சூடல் பொழில்விளை யாடல் புனலாடுதல்

     நன்மணம் செய்தல் நறவூண் களிப்புக் கலவிதுனி

     மன்மகப் பேறொடு மந்திரம் தூதுசெல விகலாடு

     இன்ன வகைச்சந்தி கூட்டுதல் கூறல்இக் காப்பியமே.’

                                           -    61

 

     ‘விருப்பம் தருஞ்சுவை பாவம்விளக்கி மிகுபாக்களால்

     உரைத்த இனத்தால் உரையோடு உடன்படல் மேற்பரந்து

     சருக்கம் இலம்பகம் பரிச்சேதம்என்று தனதுபெயர்

     தெரித்து வருவது செப்பிய காப்பியம் தேமொழியே.’

                                           -    62

 

     ‘நெறியறிந் திவ்வாறு இயற்றியவாறு நிலைநிற்றலும்

     பெறுபெய ரென்பது பேசும்அறம்முதல் நான்கினும்தாம்

     குறைய வரினும்முன் கூறிய காப்பியம் கோகனகச்

     செறிமலர் அல்லிப் பொகுட்டினில் வாழும் திருந்திழையே.’

                                           -    63

 

     ‘பாடுநெறி வணக்கம் வாழ்த்து ஒன்று நாலாய்ப்

          பகர்பொருள்முன் வரஇறைவன் வெற்புவேலை

     நாடுநகர் பொருள்பருவம் இருசுடர் பெண்வேட்டல்

          நண்ணல்முடி பொழில்புனலாடல் கள்ளுண்டல்

     கூடுமகிழ்வு ஊடல்துனி புதல்வர்ப்பேறு

          கூறிடு மந்திரம் தூதுசெலல் போர்வென்றி