230
230

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

      நீடுசந்தித் தொடர்ச்சிசுவை பாவம் தோன்ற

          நிகழ்த்தியம்பல் முதற்பெருங்காப் பியத்துக் கம்மா.’

                                           - சித. பாட். 42

 

     ‘அறையும் இதில்சில குறைபாடெனினும் குன்றாது;

          அறம்பொருள் இன்பம்வீட்டிற் குறைபாடாகப்

     பெறுவது காப்பியமாகும்; புராணமாகும்.’        

  ’’    43

 

     ‘பெருங்காப் பியநிலை பேசுங் காலை

     பாடுநெறி வணக்கம் பரவுவாழ்த்து இவற்றின்ஒன்று

     ஏற்புடைத் தாகி முன்வர இயன்று

     நாற்பொருள் நயக்கும் நடைநெறித் தாகித்

     தன்னிகர் இல்லாத் தலைவன் மலைகடல்

     நாடுநகர் பருவம் நீடும் இருசுடர்த்

     தோற்றம்என்று இனைய தொகுதியில் புனைந்துபெண்

     வேட்டல்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல்

     புனலாடல் கள்ளுண்டல் மகிழ்வுடன் ஊடல்

     புதல்வரைப் பெறுதல் கலவியில் களித்தல்

     இன்ன செய்கையின் நன்னடைத் தாகி

     மந்திரம் தூது செலல் போர் வென்றி

     சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்

     பரிச்சே தம்எனும் பான்மையின் விளங்கி

     நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்

     கற்றவர் புனையும் பெற்றியது ஆமே.’      

 - பி. ம. 41

 

     ‘கூறு மதில்சில குறைபாடு எனினும்

     பெருங்காப் பியத்தின் பிறிதுஎன ஆகா;

     அறம்பொருள் இன்பம்வீடு அவற்றின் மேலாம்அவ்

     அறம்முதல் நான்கினும் அல்கப் பெறுவது

     காப்பியம் புராணமாய்க் கருதப் பெறுமே.’   

 - பி. ம. 42

                                                     94