பாட்டியல் - நூற்பா எண் 95

231


 

தனிநிலைச் செய்யுள் வகைப்பெயர்

 

855. வளமடல்1 உலாமடல்2 உலா3 அநு ராக

     மாலை4 மெய்க் கீர்த்தி5 புகழ்ச்சி மாலை6

    நாம மாலை7 தாரகை மாலை8

    உற்பவ மாலை9 தானை மாலை10

    வரலாற்று வஞ்சி11 செருக்கள வஞ்சி12

    பலபொருள் வஞ்சி13 நிலைபெறு குழமகன்14

    பாதாதி கேசம்15 கேசாதி பாதம்16

    உவாத்தொழில்17 கூத்தர் முதலோர் தம்மை

    யாற்றுப் படுத்தல்18-21 தூது ஆகும் இருதிணை

    போற்றுமஞ் சரி22 யெனப் புலவர் நிலைபெறச்

    சாற்றப் படும்அத் தனிநிலைச் செய்யுள்.

 

தனிநிலைச் செய்யுள் கூறுவான் தொடங்கியவற்றுள் இஃது அது பெறும்
பெயர் வேற்றுமையான் அதன் விரி இத்துணைத்து என்கின்றது.

 

     இ - ள்: வளமடல் முதல்மஞ்சரி ஈறாகச் சொல்லப்பட்ட
 இருபத்திரண்டும் அதன் விரியாம் என்றவாறு.        

    (95)

ஒத்த நூற்பா

 

     தனிநிலை, தொடர்நிலை வேறுபாடின்றிப் பன்னிருபாட்டியல் பிரபந்தத்
 தொகுப்பைக் குறிப்பிடும் நூற்பா பின்வருமாறு:

 

     ‘மேதகு சாதகம் பிள்ளைப் பாட்டே

     கோதில் வேந்தன் குடைமங் கலமே

     யோதிய வொருபோ கமைந்த கலம்பக

     முலாவே சின்னப் பூவே பரணி

     பழுதின் மடன்மறம் பல்சந்த மாலை

     யிணைமணி மாலை யிரட்டைமணி மாலை