பாட்டியல் - நூற்பா எண் 96

233

 

இ - ள்: அறனும் பொருளும் வீடும் என்று கூறும் அம்மூன்று கூறுபாட்டின்
பயனை எள்ளி மங்கையரைச் சேர்தலான் உள்ளதாகிய மெல்லிய காம
இன்பத்தினையே பயன் எனக்கொண்டு தனிச்சொல் இன்றி இன்னிசைக்
கலிவெண்பாவால் தலைவன் இயற்பெயர் எதுகையின் அப்பொருள்

முற்றப்பாடுதல் இன்ப மடலாம் என்றவாறு.       

               (96)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘அறம்பொருள் வீடு திறம்பெரிது அழித்துச்

     சிறந்த வேட்கை செவ்விதின் பராஅய்ப்

     பாட்டுடைத் தலைமகன் இயற்பெயர்க்கு எதுகை

     நாட்டிய வெண்கலிப் பாவ தாகித்

     தனிச்சொல் ஒரீஇத் தனிஇடத்து ஒருத்தியைக்

     கண்டபின் அந்த ஒண்டொடி எய்தலும்

     மற்றவள் வடிவை உற்றகிழி எழுதிக்

     காமன் கவற்றக் கரும்பனை மடல்மா

   ஏறுவர் ஆடவர் என்மனார் புலவர்.’        

- பன். பாட். 246

 

     ‘மடல்மாப் பெண்டிர் ஏறார்; ஏறுவர்

     கடவுளர் தலைவ ராய்வருங் காலே.’            

 ’’    247

 

     ‘கடவுளர் மேற்றே காரிகை மடலே.’              

’’    248

 

     ‘எந்தை உடைப்பெயர்க்கு எதுகை சாற்றி

     அந்தமில் இன்பப் பொருளால் ஏத்திப்

     பொருளும் அறமும் வீடும் பழித்து

     மடல்மா ஏறுதல் மாதர்க்கு உரித்தே.’            

’’    249

 

     ‘உற்ற அறம்பொருள்வீடு எண்ணி உயர்த்தின்பம்

     பொற்றொடி காதல் பொருட்டாகப் - பெற்றி

     உரைத்தகலி வெண்பா மடலிறைவன் ஒண்பேர்

     நிரைத்த எதுகை நிறுத்து.’            

      - வெ. பாட். செ. 28