234 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
‘பொருள் அறம் வீடு பழித்து இன்பமே பொருளாக்கிநல்லார்
மருள்பெறு வேட்கை மடல்மிக ஊர்தலின் பாட்டுடையோர்க்கு
உரிய இயற்பேர் எழுத்துக்கு இயைந்த எதுகையினால்
வருகலிவெண்பா வளமட லாக வகுத்தனனே.’
- நவ. 46
தலைவன் பேர்க்குத் தொடை எதுகை ஒன்றில்
இன்ப மடலாய்ச் சொல்லே.’
- சித. பாட். 37
‘உறழ்தொடை எதுகை ஒன்றில்இன் பத்தை
உயர்த்துஒரு தலையா ஓங்கிய காமத்து
இசைப்பது ஆகும் இன்ப மடலே.’
- பி. ம. 31
‘மடல்என்பது உலாப்போல் வழங்கினும் கண்ட
மடவார் மயலும் வருந்தலை மகன்பெயர்ப்
படமாறா எதுகையும் பகர்தல் உரித்தே.’
- தொ. வி. 261
‘அறம் பொருள் இன்பங்கள்
இம்மூன்றும் கூறுபயன்
எள்ளி மங்கையர் திறத்துஉறும் காமஇன்பமதை
யே பயன்கொண்டே தலை
வனைஇயற் பேரினைத் தக்கதே எதுகையாய்
வர நாட்டியும் தனிச்சொல்
மறுத்து இன்னிசைக் கலியின் வெண்பாவினால்தலை
மகன் இரந்தே குறை பெறாது
அனைவர் அறிமடல் ஊர்வதென்ன ஈரடி எதுகை
ஆகவே அறை வளமடல்.’
- பி. தீ. 20
‘அறம்பொருள் இன்பம் ஆகிய பயனை
எள்ளி மகடூஉக் காமஇன் பத்தைப்
பயன்எனக் கொண்டு பாட்டுடைத் தலைவன்
இயற்பெயர்க்கு எதுகை இயல்பு நாடிப்
பகர்ந்துஅவ் வெதுகைப் படத்தனிக் கிளவி
இன்றி இன்னிசைக் கலிவெண் பாவால்
|