பாட்டியல்
- நூற்பா எண் 96,97 |
235 |
தலைம கனிரந் துகுறை பெறாது
மடலே றுவதா ஈரடி எதுகை
வரப்பா டுவது வளமட லாகும்.’
- மு. வீ. யா. ஒ. 126
தொ. வி. 283. உரை.
96
உலாமடல்
857. கனவின் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோன்
நனவின் அவள்பொருட் டாக நானே
ஊர்வேன் மடல்என்று உரைப்பது உலாமடல்.
இது உலாமடல் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: சாக்கிரத்து நின்று நழுவிய சொப்பனத்தின் ஒரு பெண்ணைக்கண்டு கல்வி இன்பம் நுகர்ந்தோன்
விழித்தபின் அவள்பொருட்டாக மடல் ஊர்வேன் என்று கலிவெண்பாவால் சாற்றுதல் உலா மடலாம் என்றவாறு.
கலிவெண்பா என்பது அதிகாரத்தான் வருவித்து உரைக்கப்பட்டது.
(97)
ஒத்த நூற்பாக்கள்
‘கனவினளுக்கு,
ஊர்வன் எனக் கலிவெண்பா உலாமடல்.’
- நவ. 10
‘சொன்னமா தரைக்கண்டு கனவில் சேர்ந்தோன்
துணிவன் மடல் என்றதுஉலா மடல்.’
- சித. பாட். 38
‘தருண நன் மாதைஓர் தலைவன் கண்டு
உறுப்புநலன் உவந்து உட்குறிப்பு உரைத்தும்
கனவினில் சேர்ந்தும் கரமுற இனையாள்
துணிவன் மடல்எனச் சொல்வது உலாமடல்.’
- பி. ம. 32
|