236 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
‘கனவில் ஒருமாதினைக் கண்டு அணைந்து இன்பம்
கலந்துபின் விழித்துமாதைக்
காணாமல் அவள் பொருட்டாக மடல் ஊர்வதைக்
கலிவெள்ளையால் அரற்றல்
இனை உலாமடலாம்.’
- பி. தீ. 20
‘கனவில் ஒருத்தியைக் கண்டு கலவி
இன்பம் நுகர்ந்தோன் விழித்த பின்அவள்
பொருட்டுமடல் ஊர்வேன் என்பது கலிவெண்
பாவான் முடிப்பது உலாமடல் ஆகும்.
- மு. வீ. யா. ஒ. 125
97
உலா இலக்கணம்
858. குழமக னைக்கலி வெண்பாக் கொண்டு
விழைதொல் குடிமுதல் விளங்க உரைத்துஆங்கு
இழைபுனை நல்லார் இவர்மணி மறுகின்
மற்றுஅவன் பவனி வரஏழ் பருவம்
உற்றமா னார்தொழப் போந்தது உலாவாம்.
இஃது உலா இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: இளமைப் பருவம் உற்ற தலைமகனைக் குலத்தானும்
குடிப்பிறப்பானும் மங்கலங்களானும்
பரம்பரையானும் இன்னான் என்பது
தோன்றக் கூறி, அணி கலன்களான் அலங்கரித்துக்கொண்டு முதன்மை
எய்தியமானார் நெருங்கிய அழகிய வீதியிடத்து அன்னோன் பவனிவரப்
பேதை முதலிய ஏழ்பருவ
மானார் கண்டு தொழ உலா வந்தது உலாவாம்
என்றவாறு.
‘சுடர்த்தொடியார் வீதியிலே தோன்றுதலும்’
- விக்கிரம சோழனுலா.
என்றார் பிறரும்.
(98)
|