பாட்டியல்
- நூற்பா எண் 98 |
237 |
ஒத்த நூற்பாக்கள்
‘முதனிலை பின்என் நிலைஉலா வெண்கலி.’
- பன். பாட். 215
‘பாட்டுடைத் தலைவன் உலாப்புற இயற்கையும்
ஒத்த காமத்து இளையாள் வேட்கையும்
கலிஒலி தழுவிய வெள்ளடி இயலான்
திரிபின்றி நடப்பது கலிவெண் பாட்டே.’
- பன். பாட். 217
‘பேதை முதலா எழுவகை மகளிர்கண்டு
ஓங்கிய வகைநிலைக்கு உரியான் ஒருவனைக்
காதல்செய் தலின்வரும் கலிவெண் பாட்டே.’
’’ 218
‘குடிநெறி மரபு கொளல்கொடை விடியல்
நன்னீர் ஆடல் நல்லணி அணிதல்
தொன்னகர் எதிர்கொள நன்னெடு வீதியின்
மத களிறு ஊர்தல் முதனிலை ஆகும்.’
’’ 219
‘ஆதி நிலையே குழாங்கொளல் என்றெடுத்து
ஓதிய புலவரும் உளர்என மொழிப.’
’’ 220
‘வேந்தர் கடவுளர் விதிநூல் வழிஉணர்
மாந்தர் கலிவெண் பாவிற்கு உரியர்.’
’’ 221
‘நாலு வருணமும் மேவுதல் உரிய
உலாப்புறச் செய்யுள்என்று உரைத்தனர்புலவர்.’
’’ 222
‘திறந்தெரிந்த பேதை முதல்எழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்று - அறைந்தகலி
வெண்பா உலாவாம்.’
- வெண். பாட். செ. 27
‘தெருவினில் பேதைமுதல் எழுவோர்கள் திறத்து உவமை
ஒருவனை ஏத்தும் கலிவெண் பாத்தான் உலாவாம்.’
- நவ. 44
|