பாட்டியல்
- நூற்பா எண் 98, 103 |
239 |
மான் நேரிசைக் கலியின் வெண்பாவினால் கூறல்
வரும் உலா ஆகும் அன்றே.’
- பி. தீ.
19
‘இளமைப் பருவத் தலைமகன் குணமும்
குடியும் பிறப்பும் மங்கலம் பரம்பரை
இவற்றான் இன்னான் என்பது தோன்ற
மாதர் நெருங்கிய வீதி இடத்துஅவன்
பவனிவரப் பேதை முதலிய ஏழு
பருவப் பெண்களும் பார்த்து வணங்க
உலாவந்த தாக உன்னி நேரிசைக்
கலிவெண் பாவால் கழறுவது உலாவே.’
- மு. வீ. யா. ஒ. 124
98
உலாமகளின் பருவ வரையறை
859. ஐந்து முதல்ஏழ் ஆண்டும் பேதை;
99
860. எட்டு முதல்நான்கு ஆண்டும்
பெதும்பை;
100
861. ஆறிரண்டு ஒன்றே ஆகும் மங்கை;
101
862.
பதினான்கு ஆதிபத் தொன்பான் காறும்
எதிர்தரும் மடந்தை; மேல் ஆறும்
அரிவை.
102
863. ஆறுதலை யிட்ட இருபதின் மேல்ஓர்
ஆறும் தெரிவை; எண் ணைந்துபே ரிளம்பெண் என்று
ஓரும் பருவத் தோர்க்குஉரைத் தனரே.
103
இவ்வைந்து சூத்திரமும் வெளிப்படை.
ஒத்த நூற்பாக்கள்
‘ஏழு நிலையும் இயம்பும் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
|