பாட்டியல்
- நூற்பா எண் 103, 104 |
241 |
‘சிற்றில் பாவை கழங்குஅம் மனையே
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே
பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே
நன்மது நுகர்தல் இன்ன பிறவும்
அவரவர்க்கு உரிய ஆகும் என்ப.’
- பன். பாட். 236
‘பகருங்கால் ஐந்தேழ் பதினொன்று பன்மூன்று
அகலாத பத்தொன்பான் ஐயைந்து - இகலாத
முப்பத்தொன்று ஈரிருபான் பேதைமுத லோர்க்குச்
செப்புவர்ஆண்டு எல்லைத் திறம்.’
- வெண். பாட். செ. 26
‘பேதைமுதல் எழுவோர்க்குப் பிராயங்கள் பேசும்அளவு
ஆதிஐந்து, ஏழு, பன்னொன்று, பன்மூன்று, பத்தா, றொன்பது,
மீதிருபத்தைந்து, முப்பத்தொன்றாம், மிகுநாற்பதென்றே,
ஓதினர்; தொன்னூற் பருணிதர் எல்லாம் உணர்ந்துகொண்டே.’
- நவ. 45
99 - 103
அநுராகமாலை
864. கனவின் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த்து
இனிதின் உணர்ந்ததை இன்னுயிர்ப் பாங்கற்கு
நனவின் உரைத்தல் அநுராக மாலை.
இஃது அநுராகமாலை ஆமாறு கூறுகின்றது.
பொருள் வெளிப்படை. இவை மூன்றும் நேரிசைக் கலி வெண்பாவாம் என்று அறிக.
(104)
ஒத்த நூற்பாக்கள்
‘கனவின் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்தும்
இனிமையுறச் சேர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கனுக்கு உரைத்தது
என நேரிசைக்கலி வெண்பா அநுராகமாலை.’
- நவ. 4
|