242
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘சொன்னமா தரைக்கண்டு கனவில் சேர்ந்தோன்
பாங்கற்கு, இன்னலுரைத் திடுதல் அநு ராகமாலை.’
- சித. பாட். 38
‘பாங்கற்குப் புணர்ந்த கனவினால் தனது
இன்னல் வரு ணித்தல் அநுராக மாலை
... ... ... ... ... கலிவெண்
பாவினால் விரித்துப் பகருவது மரபே.’
- பி. ம. 33
‘தலைவன் ஒரு மங்கையைக் கனவில் கண்டுமால்
தரும் அவட்கு இனிமை உறவே
காவின் புணர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கனைக்
கருதியே நேரிசையெனும்
கலிவெண் பாவால் கூறல் அநுராகமாலையாய்க்
கவிஞர்கள் உரைப்பார்களே.
- பி. தீ. 9
‘கனவின் ஒருத்தியைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து
இனிமை உறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப்
பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக
நேரிசைக் கலிவெண் பாவான் நிகழ்த்துவது
அநுராக மாலையாம் ஆயுங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 87; தொ. வி. 283 உரை.
104
மெய்க்கீர்த்திமாலை
865. சொற்சீர் அடியான் தொழில்படு கீர்த்தியைப்
பொற்புற மொழிதல் மெய்க்கீர்த்தி மாலை.
இது மெய்க்கீர்த்தி மாலையின் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்த கீர்த்தியை அழகுற
மொழிதல் மெய்க்கீர்த்திமாலையாம் என்றவாறு.
(105)
|