பாட்டியல்
- நூற்பா எண் 105, 106 |
243 |
ஒத்த
நூற்பாக்கள்
‘சொற்சீரடிக்
கட்டுரைப்பாக் குலமுறைக் கீர்த்தி புகறல்
மெய்க்கீர்த்தி
மாலை.’
- நவ. 7
‘மருவுசொற் சீர்அடி எனும்
கட்டுரைச் செய்யுள்
மரபுவழியில் செய்திடும்
மற்புயன் கீர்த்தியை விரித்தெடுத்
தோதல்
வளரும்மெய்க் கீர்த்தி
மாலை.’
- பி. தீ. 18
‘சொற்சீர் அடியெனும் கட்டுரைத்
தொடர்பால்
குலமுறை ஆற்றிய கீர்த்தியைக்
கூறல்
மெய்க்கீர்த்தி மாலையாம்
விளம்புங் காலே.’
-மு. வீ. யா. ஒ. 99; தொ. வி. 283 உரை.
105
புகழ்ச்சி
மாலை, நாமமாலை
866.
மயக்க அடிபெறும் வஞ்சிப் பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
நாம மாலை யாம்என நவில்வர்.
இது
புகழ்ச்சிமாலையும் நாமமாலையும் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: அகவல்அடியும் கலிஅடியும் வந்து மயங்கிய
வஞ்சிப்பாவால்
வியக்கத்தகும் நல்லாரது விழுமிய
சிறப்பைக் கூறுதல் புகழ்ச்சி மாலையாம்; அவ்வஞ்சிப்
பாவால் ஆண் மகனைப் புகழ்ந்து பாடுதல் நாம மாலையாம்
என்று கூறுவர் புலவர் என்றவாறு.
(106)
ஒத்த
நூற்பாக்கள்
‘வெள்ளடி இயலான் புணர்ப்போன் குறிப்பின்
தள்ளா இயலது புகழ்ச்சி மாலை.’
- பன். பாட். 287
|