244
244

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

  ‘அதுவே, செங்கலை வண்ணப் பாவும் இயங்கும்.’

                                         - பன். பாட். 286

 

  ‘ஆடவர் திறத்து வஞ்சி யின்னெறி

     நாடிய பாதம் மயங்க வைப்பின்

     நாம மாலை; மற்றது மடந்தையர்க்கு

     ஆம்எனின் புகழ்ச்சி மாலை ஆகும்.’            

 ’’   285

 

  ‘மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை

     நேர்ந்தஅடி மயக்கம் நாம மாலை.’             

 ’’   284

 

  ‘புரிந்த மயக்கஅடி வஞ்சியால் பொய்தீர்

     திருந்திழையார் சீர்பேர் சிறக்கத் - தெரிந்துரைத்தால்

     மன்னும் புகழ்ச்சிநன் மாலையாம் மைந்தர்க்காம்

     பின்நாம மாலைப்பேர் பெற்று.’           

 - வெண். பாட். செ. 35

 

  ‘பாதம் பலமயங்கும் வஞ்சி ஆடவரைப் பரவி

     ஓதுமது நாமமாலை; உரைத்த அச்செய்யுளினான்

     மாதரை ஏத்தின் புகழ்ச்சி நன்மாலை.’          

  - நவ. 47

 

  ‘வஞ்சி, பேசுகுணப் பேர்அடுக்கி மடவார்க்கு ஓதில்

     பெரும்புகழ்ச்சி மாலை ; அப் படிஆண் பாற்கு

     மாசகல உரைக்கில்அது நாமமாலை.’            

  - சித. பா. 36

 

   ‘குணப்பெயர் அடுக்கிக் கொம்பனை யார்க்கு

     வஞ்சியின் அகமிக மகிழ உரைப்பது

     பெருமகிழ்ச்சி மாலை; இப்படி ஆடவர்க்கு

     நயந்து பாடுவது நாம மாலை.’                   

  - பி. ம. 29

 

   ‘புகழ்ச்சி மாலையாம் பூங்குழ லாரை

     இகழ்ச்சியில் குலம்இயை வஞ்சி பாடல்;

     நாம மாலையாம் நம்பிகண் புகழ்தலே.’      

 - தொ. வி. 269

 

   ‘அகவலடியும் கலியின்அடி மயங்கிய வஞ்சி

          ஆன அப்பாவினாலே

 

     ஆண்மகனையே புகழ்ந்தே கருத்தளவினில்

          ஆற்றுவது நாமமாலை; மகளிர் புகழ்ச்சிமாலை.’

- பி. தீ. 11