பாட்டியல்
- நூற்பா எண் 106, 107 |
245
|
அகவ லடிகலி யடியும் மயங்கிய
வஞ்சியின் அரிவையர் மாண்பை உரைப்பது
புகழ்ச்சி மாலையின் பொருளா கும்மே.’
- மு. வீ. யா. ஒ. 96
‘அகவ லடிகலி அடியும் மயங்கிய
வஞ்சியால் புருடனை வாழ்த்திப் புகழ்வது
நாம மாலையாம் நாடுங் காலே.’
- மு. வீ. யா. ஒ. 92
106
தாரகை மாலை
867. வகுப்பால் கற்புடை மகளிர்க்கு உள்ள
தகைத்திறம் கூறுதல் தாரகை மாலை.
இது தாரகைமாலை இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: வகுப்பினால் அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு உள்ள
இயற்கைக் குணங்களைக் கூறுதல்
தாரகை மாலையாம்
என்றவாறு.
(107)
ஒத்த நூற்பாக்கள்
‘இரண்டு பொருள்புணர் இருபத் தெழுவகைச்
சீரிய பாட்டே தாரகை மாலை.’
- பன். பாட். 305
(இதன் கருத்து வேறாகும்)
‘ஓதுசந்தத் தால்உரைத்தல் தாரகை மாலை
கோதிலாக் கற்பின் குலமகளை.’
- வெண். பாட். செ. 33
‘வடமீன்மகள் இயற்கைக்கு உதவுமேல், தாரகைமாலை.’
- நவ. 8
‘தாரகை இருபத் தேழையும் தகைபெற
சொல்லணி வகுப்பில் தூசி அணிதக
வழுத்துதல் தாரகை மாலை என்ப.’
- பி. ம. 36
|