246 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     முறையின்,

     உரை அருந்ததிக் கற்பின் மாதர்கள் குணங்களை

     ஓதல் தாரகை மாலையாம்.’                   

- பி. தீ. 13

     ‘அருந்ததிக் கற்பின் அரிவையர்க்கு உள்ள

     இயற்கைக் குணங்களை வகுப்பால் இயம்புதல்

     தாரகை மாலையாம் சாற்றுங் காலே.’

                      - மு. வீ. யா. ஒ. 103; தொ. வி. 283 உரை

    

  107

உற்பவமாலை

 

868.    அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து

       உரிதின் புகறல் உற்பவ மாலை.

 

இஃது உற்பவமாலை ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: மாயன் பிறப்புப் பத்தனையும் அகவல் விருத்தத்தாற் கூறல் உற்பவமாலையாம் என்றவாறு.                                                                  

(108)

 

ஒத்த நூற்பாக்கள்

 

 

     ‘சேலே யாமை ஏனம் சிங்கம்

     கோல வாமனன் மூவகை இராமர்

     கரியவன் கற்கி எனவரு கடவுளர்

     புரிதரு தோற்றம் தெரிதரப் பராஅய்ப்

     பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டிய 

     இனமொழி நாட்டி அகவல் விருத்தம்

     ஒருபது இயற்றுதல் ஆழியோன் பிறப்பே.’

                                             - பன். பாட். 298

 

     ‘இசைத்திடுவர் மால்பிறப்பால் ஈரைந்து வாழ்த்துத்

     தசப்பிரா துற்பவமாம் தந்து.’                          

- வெண். பாட். செ. 42