248& இலக
பாட்டியல் - நூற்பா எண் 108, 109

247


 

     ‘பத்தான் வரினே,

     குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே.’

                                           - நவ. 50

 

     ‘ஆய்ந்ததசப் பிராதுற்ப வம்பத் தான

          அரிபிறப்புஆ சிரியவிருத் தத்தால் வாழ்த்தில்.’

                                      - சித. பாட். 40

    

     ‘பகர்தசப் பிராதுற் பவம்பத் தான

     அரிபிறப்பு ஆசிரிய விருத்தம் பத்தால்

     வாழ்கென வாழ்த்துதல் மரபா கும்மே.’      

- பி. ம. 37

 

     ‘உயர்மால் பிறப்பு ஆசிரிய விருத்தத்தால்

          உரைத்தல் உற்பவ மாலையே.’             

- பி. தீ. 13

 

     ‘அரிபிறப்பு ஈரைந் தனையும்ஆ சிரிய

     விருத்தத்தால் விளம்புவது உற்பவ மாலை.’

                      -மு. வீ. யா. ஒ. 104; தொ. வி. 283 உரை

                                                     108

 

தானைமாலை முதலியன

 

869. ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்

    தூசிப் படையைச் சொல்வது தானை

    மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி

    ஞாலம்மேல் தானை நடப்பது சொல்லின்;

    செருக்களம் கூறின் செருக்கள வஞ்சி;

    விரித்துஒரு பொருளை விளம்பின்அப் பெயராம்.

 

இது தானைமாலையும் வரலாற்று வஞ்சியும் செருக்கள வஞ்சியும் பொருள் வஞ்சியும் ஆமாறு கூறுகின்றது.

 

இ - ள்: அகவல் ஓசையில் பிறழாது உயர்ந்த அரசர்க்கு உரிய
ஆசிரியப்பாவால் முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப்படையைச் சொல்வது தானைமாலை