248

248

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

 

யாகும்; போர்க்களத்தில் செல்லும் படைஎழுச்சியைக் கூறின் வரலாற்று வஞ்சியாம்; செருக்களத்தினைக் கூறின் செருக்களவஞ்சி என்னும் பெயர் பெறும்; ஏனைப் புறத்திணைக்கண் துறுத்திக் கூறும் துறைப் பொருளை விரித்துக்கூறின் அத்துறைப்பெயர் பெறும் என்றவாறு.  

        (109)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘படைத்திறம் சொல்லின் பகர்தானை, வஞ்சி

     எடுத்துமேல் சேறல் இயம்பின், - அடுத்தமைந்த

     வெற்றிஉரை வாகையாம், வேந்தன்பா ஒன்றினால்

     உற்றுரைத்து மாலைப்பேர் ஓது.’    

- வெண். பாட். செ. 31

 

   ‘தூசிப்படை ஆசிரிய

     விதிதவறாத் தானைமாலை என்றாகும்.’           

 - நவ. 8

 

   ‘குலமுறை கீர்த்தி பிறப்பு மேம்பாட்டுச் சிறப்பைச்

     சொலல் வரலாற்று வஞ்சி.’                     

- நவ. 12

 

   ‘நிரைகவர் மீட்டல் செலல்ஊன்றல் காவளை நேர்தல் வென்றி

     மருவிய வெட்சி கரந்தையும் வஞ்சியும் காஞ்சி நொச்சி

     உரைஉழிஞை தும்பை வாகையும் அஃதவை மாலை என்பர்;

     செருகு பூவேய்தல் அகவல் எண்மூன்றும் முதல் அடைவே.’

                                                - நவ. 11

 

   ‘அடுமத யானையைப் படுத்திப் பகையானை எதிர்த்து

     இடில் மற்றுஅவ் வஞ்சி மால்வர வாதோரண மஞ்சரியாம்.’

                                                - நவ. 13

 

     எப்பொருளும்,

     நீதியினால் சொல்லின் அப்பெயரால் வஞ்சி நேர்ந்தனவே.’

                                               - நவ. 47

 

   ‘செருக்கள வஞ்சியாம் செருமுகத் தாயவை

     சுருக்கிய வஞ்சியால் தொடுத்துப் பாடலே.’        

- தொ. வி. 270