250
250

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     மகிழ்நிரைகொள் வதுவெட்சி, கரந்தை மீட்டல்,

          மாற்றார்பால் செலல்வஞ்சி, ஊன்றல் காஞ்சி,

     பகர்மதிலைக் காக்குமது நொச்சி, சுற்றிப்

          படைவளைத்தல் உழிஞை, பொரல் தும்பை, வென்று

     புகழ்படைத்தல் வாகையது, மாலைப் பேரால்

          போற்றுவது மாலையுமாப் புகல்வர்; தானை

     அகலமுரைப் பதுதானை மாலை; தூசி

          அணிவகுப்பில் தாரகைமா லையைச்சொல் ஆய்ந்தே.’

                                           - சித. பாட். 39

 

     ‘வாய்ந்தசெருக் களவஞ்சி களத்தைக் கூறல்,

          வரலாற்று வஞ்சிபல வரலாறு ஓதல்.’           

  ’’    40

     ‘தலைவன் செய்த நிலைபெறு புகழ்புனை

     நேரிசை வெண்பா இன்னிசை வெண்பாப்

     பஃறொடை வெண்பா மறக்கள வழியே.’     

 பன். பாட். 315

 

     நேரிசை இன்னிசைப் பஃறொடை வெண்பா

     போரின் களவழி புகலப் படுமே.’               

 ’’    316

     ‘குறள்சிந்து அளவடி அகவல் அடிவிராய்

     வஞ்சிச் செய்யுளின் மன்னவர் மறக்களம்

     எஞ்சாது உரைப்பது மறக்கள வஞ்சி.’           

 ’’    317

 

     இயங்குபடை மன்னர் இயற்களம் புகழ்ந்த

     மயங்கியல் வஞ்சி மறக்கள வஞ்சி.’        

 - பன். பாட். 318

 

     ‘விருத்தவகை பத்தான் விளம்பும் அதனை

     செருக்களம் எனவே செப்பினர் புலவர்.’         

 ’’    319

 

     ‘ஆநிரை கவர்ந்து வருபவன் வெற்றி

     விளம்புதல் வீர வெட்சி மாலை.’         

 மு. வீ. யா. ஒ. 108

 

     ‘தழுவார் கொண்ட தம்நிரை மீட்போர்

     கரந்தை புனைந்து கனன்றுல வையிற்செலீஇ

     மீட்பதைக் கூறல் வெட்சிக் கரந்தை.’                

  ’’    109