252 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
சேர்த்த வர்க்கும் வீரச் சிறப்பை
வஞ்சியிற் பாடுவது அதுவா தோரண
மஞ்சரி எனப்பெயர் வைக்கப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 118; தொ. வி. 283. உரை
109
குழமகன்
870. கலிவெண் பாவால் கையினில் கண்ட
குழமக னைச்சொலின் குழமகன் ஆகும்.
இது குழமகன் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: கலிவெண்பாவினான் மங்கையர் தம்கையில் கண்ட இளமைத்தன்மை உடைய குழமகனைப்
புகழ்ந்து பாடின் குழமகன் ஆகும்
என்றவாறு.
110
ஒத்த நூற்பாக்கள்
‘குழமகன் மேவில்அவ்
ஒண்பாக் குழமகனாம் உற்று.’
- வெண். பாட். செ. 27
‘ஒண்தொடியார்,
மருமலர்க் கையில் குழமகன் மேல்வைத்த மன்விருத்தம்
தருகலி வெண்பாக் குழமகனாம் என்று சாற்றுவரே.’
- நவ. 44
உயர்பெண்கள் தம் கையில்கண்ட இளமைத்தன்மை
உடைய குழமகனைப் புகழ்ந்து
ஓதல் குழமகன் ஆகும்.’ -
பி. தீ. 26
‘கலிவெண்
பாவால் காரிகை யார்கரம்
கண்ட இளமைத் தன்மையை உடைய
குழமகன் தன்னைப் புகழ்ந்து கூறுவது
குழமகன் ஆம்எனக் குறிக்கப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 153; தொ. வி. 283. உரை
|