பாட்டியல் - நூற்பா எண் 111 |
253 |
பாதாதி கேசம், கேசாதி பாதம்
871. அடிமுதல் முடிஅளவு ஆக இன்சொல்
படர்வுறு கலிவெண் பாவால் கூறல்
பாதாதி கேசம் கேசாதி பாதம்
ஓதின்அப் பெயரான் உரைக்கப் படுமே.
இது பாதாதிகேசமும் கேசாதிபாதமும் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: கலிவெண்பாவால் பாதம் முதல் முடி அளவும் கூறல் பாதாதி
கேசமாம்; முடிமுதல் அடி
அளவுங்கூறல் கேசாதிபாதமாம் என்று கூறப்படும்
என்றவாறு.
(111)
விளக்கம்
தெய்வங்களையும் தெய்வம் போல்வாரையும் பாதாதிகேசமாகவும் ஏனையாரைக் கேசாதி பாதமாகவும்
பாடுதல் மரபு.
பாதம் - அடி; கேசம் - மயிர்முடி.
‘அகவடி உயிரே விரல்புற வடியே
பரடே கழலே கணைத்தாள் முழந்தாள்
குறங்கே அல்குல் கொப்பூழ் வயிறுஅதன்
வரையே இடையே மயிரின் ஒழுங்கே
முலைஉகிர் விரலே முன்கை அங்கை
தோள்இணை கழுத்தே முகம்நகை செவ்வாய்
மூக்கே கண்ணே காது புருவம்
நுதல்எனும் ஆறைந்து உறுப்புடன் இரண்டும்
பாதம் ஆதியா வேண்டுதல் புணர்ப்பின்அஃது
ஓதிய பாதம் ஆதியாம் என்ப.’
- பன். பாட். 332
|