New Page 1

254 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

         ‘உறுப்பமைந்த,

         பாதாதி கேசமும் கேசாதி பாதமுமா

         ஓதும் கலிவெண்பா ஒன்று.’                       

- வெண். பாட். செ. 29

   

    ‘கடிதலில்லாக் கலிவெண்பாப் பகரும் அவயவங்கள்

     முடிவது கேசமும், கேசம்முதல் அடிஈறும் வந்தால்

     படிதிகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமுமாம்

     வடுவில வெண்பா விருத்தம் பலஅங்கமாலை என்னே.’

- நவ. 42

     ‘அகங்கால் உகிர்விரல் மீக்கால்பரடு அங்கணை முழந்தாள்

     மிகுங்கால் துடைஇடை அல்குல் கொப்பூழ்வயின் வெம்முலையாய்

     நகம்சார்விரல் அங்கைமுன்கை தோள்கண்டம் முகம்நகைவாய்

     தரும்காது இதழ்மூக்கு கண்புருவம் நெற்றி தாழ்குழலே.’

- நவ. 43

         ‘கலிவெண் பாவால்

     பாதாதி கேசம்கே சாதி பாதம்

         மகிழஉரைத் திடிலந்தப் பேராம்.’                         

- சித. பாட். 35

 

     ‘பாதாதி கேசம் கேசாதி பாதம்

     எண்ணான்கு உறுப்பும் ஏற்கவரு ணித்துக்

     கலிவெண் பாவால் கட்டுரை செய்வது

     அவ்வப் பெயரின.’                         

- பி. ம. 26

     ‘உற்றஅடி முடிவரை கலிவெண் பாவினால்

         ஓதல் பாதாதி கேசம்;

     ஒளிரும்முடி அடிவரை கலியின் வெண்பாவால்

         உரைத்தல் கேசாதி பாதம்.’                                 

- பி. தீ. 24

 

     ‘கால்முதல் முடிவரை கலிவெண் பாவால்

     பாடு வதுபா தாதி கேசம்

     ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.’                    

- மு. வீ. யா. ஒ. 145

 

     ‘கலிவெண் பாவால் முடிமுதல் கால்வரை

     கிளத்தல் கேசாதி பாதம் ஆகும்.’                                

  ’’    146

     

                                                                       111